வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார கேடு

Update: 2022-08-18 14:35 GMT

வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார கேடு

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் ரெயில்வே பாலத்தின் கீழ் கழிவுநீர் குப்பைகளுடன் வழிந்தோடுகிறது. இதனால் 2 சக்கர வாகனங்களில்செல்பவர்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள், பாதசாரிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் கீழ் கழிவுநீர் செல்வதை தடுக்க உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பிரபாகரன் பாலசுப்பிரமணி,திருப்பூர்.

9894387879

மேலும் செய்திகள்