சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 3-வது தெருவில் கழிவுநீர் கசிந்து சாலையெங்கும் பரவி வருகிறது. இதனால் இந்த சாலையில் நடப்பதற்கே சிரமமாக உள்ளது. மேலும் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது. எனவே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதோடு, கழிவுநீர் கசியாமல் இருப்பதற்கும் நிரந்தர தீர்வு வழங்க வேண்டும்.