சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கற்பக விநாயகர் கோவில் தெருவிற்கும் பிள்ளையார் கோவில் முதல் தெரு மற்றும் 2-வது தெருவை இணைக்கின்ற வகையில் மண் சாலை உள்ளது. இந்த சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் மழைக் காலங்களில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் பெண்கள் நடப்பதற்கு அச்சப்படுகின்றனர். இந்த சாலையில் ஒரு சிமெண்ட் சாலையும், மின்விளக்கும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.