ஆபத்தான கால்வாய்

Update: 2022-07-01 14:53 GMT
சென்னை நெற்குன்றம் அகத்தியர் நகர் 2-வது தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாய் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால், அடிக்கடி விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் கூட மாடு ஒன்று இந்த கால்வாயில் விழுந்துவிட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மாட்டை காப்பாற்றிவிட்டனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன்பு இந்த கழிவுநீர் கால்வாய் மேல் சிமெண்ட் பலகை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்