சென்னை கொருக்குபேட்டை ராதாகிருஷ்ணன் நகர் 3-வது தெருவில் கழிவுநீர் கசிந்து சாலையெங்கும் பரவி வருகிறது. தொடர்ந்து கசிந்து வரும் கழிவுநீரால் அந்த பகுதியே அசுத்தமாக மாறி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அந்த பகுதியில் நோய் தொற்று ஏற்படுவதற்கும் வழி செய்துவிடும். எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாய் உடனடியாக சரி செய்ய வேண்டும்.