சென்னை விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 3-வது தெருவில் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் தெருவில் நடக்கவே முடியாத சூழல் ஏற்படுவதோடு வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். மேலும் துர்நாற்றம் வீசி வருவதால் குழந்தைகளுக்கு எளிதில் காய்ச்சல் போன்ற நோய்தொற்று ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீருக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு வழங்க வேண்டும்.