சென்னை கீழ்கட்டளை பாலமுருகன் நகர் 4-வது தெருவில் இருக்கும் பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. சாலையில் செல்லும் கழிவு நீர் பள்ளமான இடத்தில் தேங்கி விடுவதால் அந்த சாலையை கடந்து செல்லவே சிரமமாக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் பல்வேறு இன்னல்களை உருவாக்கிவிடும் என்பதால் கழிவுநீர் அகற்றும் வாரியம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமா?