சென்னை ராயபுரம் சிமெட்ரி சாலையில் கழிவுநீர் தேங்கி, நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகிறார்கள். மேலும் நடந்து செல்லும் பாதசாரிகளும் மூக்கை பொத்திக்கொண்டு சாலையை கடந்து செல்லும் நிலையுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும். மேலும் கழிவுநீர் தேங்காதவாறு நிரந்த தீர்வு காண வேண்டும்.