பாதாள சாக்கடையில் விழுந்த நபர்

Update: 2022-06-18 14:39 GMT
சென்னை பெரம்பூர் ஜமாலியா பகுதியில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை சரி செய்யாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நபர் ஒருவர் தவறி விழுந்து விட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் அவர் உயிருடன் மீட்கப்பட்டார். அச்சுறுத்துலாக இருக்கும் இந்த பாதாள சாக்கடையை மாநகராட்சி கவனித்து சரி செய்வார்களா? என்பதே இப்பகுதி மக்களின் கேள்விக்குறியாக உள்ளது. இந்த இடத்தை சுற்றி ஜாமலியா பஸ் நிறுத்தம், நர்சரி பள்ளிக்கூடம், வங்கி, பள்ளிவாசல் போன்றவை உள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்