சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும்போது, நடந்து செல்லும் மக்கள் மீது கழிவுநீரை வாரி இரைப்பது போன்ற சம்பவங்கள் தினமும் நடக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாலையில் தேங்கியிருக்கும் கழிவு நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.