சென்னை ஹரி நாராயணபுரம் ஒன்றாம் தெருவிலிருந்து ஐந்து மற்றும் பிரதான சாலை தெரு வரை இருக்கும் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. சுமார் 40 நாட்களாக நீடிக்கும் இந்த பிரச்சினையால் எங்கள் பகுதி மக்கள் சுகாதாரமற்ற நீரையே பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் பணம் கொடுத்து தண்ணீர் வழங்கும் நிலைக்கும் வந்துவிட்டார்கள். எனவே குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குமா?