சென்னை தியாகராயர் நகர், ஜி.என்.செட்டி. சாலையில் உள்ள தனியார் வங்கி அருகே உள்ள இடத்தில் பாதாள சாக்கடை நிரம்பிவருகிறது. இதனால் இந்த சாலையில் கழிவுநீர் தேங்கிவருகிறது. மேலும் சாலையில் நடந்து செல்பவர்கள் மீது வாகனத்தில் செல்பவர்கள் சேற்றை வாரி இரைப்பது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் தேங்கியிருக்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.