சென்னை வேப்பேரி நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி எதிரில் உள்ள உயர்நிலைப் பள்ளி அருகில் மழைநீர் வடிகால் சம்பந்தமான கட்டுமான பணிகள் நிறைவு பெறாமல் இருக்கிறது. கழிவுநீர் தேங்கியபடி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. பருவமழைக்கு முன் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மழைநீர் வடிகால் பணி முடிக்கப்படுமா?