நெல்லை டவுன் பாட்டப்பத்து நபிகள் நாயகம் தெருவில் கழிவுநீர் வாறுகாலை சரியாக சுத்தம் செய்தில்லை. இதனால் காம்பவுண்டு பகுதிக்குள் கழிவுநீர் வந்து நடைபாதையில் தேங்கி கிடக்கிறது. பள்ளிக்கூட மாணவர்கள் தினமும் அதில் தான் நடந்து செல்கிறார்கள். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தினமும் வாறுகாலை சுத்தப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.