சித்தோடு பேரூராட்சி 13-வது வார்டு ஓடக்காட்டில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயை அடைத்து விட்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொிய சாக்கடை வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அடைபட்ட சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை, வேறு வழியில் செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.