சென்னை வியாசர்பாடி பி.பி சாலை பாலமுருகன் தெருவில் மழை நீர் வடிகால் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. மேலும் வடிகால்வாய்களில் மூடிகள் எதுவும் இல்லாமல் திறந்தநிலையில் இருப்பதால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பத்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகிறோம்.