சேலம் மாநகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகணபதி நகர், அன்பு நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் அங்கு மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீதியில் ஆறாக ஓடுகிறது. மேலும் சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை முன்வரவேண்டும்.
-நதியா, ராஜகணபதி நகர், சேலம்.