தஞ்சை மேலவெளி பகுதி சூர்யாநகரில் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி கழிவுநீர் வெளியேறி அந்த பகுதி முழுவதும் சேறும்,சகதியுமாக உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?