தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு-கேசர்குளி சாலையில் வாழைப்பழம் மண்டி அருகே சாலையோரம் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் குப்பை கழிவு பொருட்கள் அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பழனி, பாலக்கோடு, தர்மபுரி.