கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2025-11-09 11:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சில கிராம பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. கால்வாய்க்குள் குப்பைகள், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவை குவிந்து கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை அவ்வப்போது தூர்வார கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்