காஞ்சீபுரம் மாவட்டம், நீர்வள்ளுர் கிராமத்தில் உள்ள ஏரி உபரிநீர் வடியும் கால்வாயில் செடி,கொடிகள் ஆக்கிரமித்து நீர் சரியாக செல்ல முடிவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். பலமுறை இதுதொடர்பாக புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே நீர் செல்வதற்கு ஏதுவாக அங்குள்ள ஆக்கிரமிப்பு செடி,கொடிகளை அங்கிருந்து அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும்.