விழுப்புரம் பூந்தோட்டம் சகுந்தலா நகர் 23-வது வார்டு பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சாலையில் செல்லவே சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.