சாலையில் ஓடும் சாக்கடை கழிவுநீர்

Update: 2022-08-03 14:34 GMT

தா்மபுாி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்டஅள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊர் தெருக்களில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு சாக்கடை கால்வாய் அமைத்து தர அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-வேலு, ராமகொண்டஅள்ளி, தர்மபுரி. 

மேலும் செய்திகள்