தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் செயல்பட்டு வரும் அரசினர் தொடக்கப்பள்ளி அருகிலேயே சாக்கடை கால்வாய் அமைந்துள்ளது. இந்த சாக்கடை கால்வாய் மூலம் அதிக கொசு தொல்லை இருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பள்ளி மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாக்கடையால் சுகாதார ்கேடு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நோய் பரவும் அபாயம் உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்..
-முத்துமணி, ஏரியூர், தர்மபுரி.