தஞ்சை மாவட்டம் திருவையாறு தியாகராஜர் சமாதி குடியிருப்புக்கு பின்புறத்தில் உள்ள சாலையோரத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதன்காரணமாக குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் கொசுத்தொல்லையில் சிக்கித்தவித்துவருகின்றனர். கொசுக்கடியால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் மழைநீரால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?