பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டப்பாடி கிராமத்தில் சில தெருக்களில் கழிவுநீர் கால்வாயினுள் மண் கொட்டி உள்ளனர். இதனால் வீடுகளின் கழிவுநீர் வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அனைத்து தெருக்களிலும் முழுமையாக கழிவுநீர் செல்ல வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.