சென்னை விருகம்பாக்கம், ஆற்காடு சாலை மாதா அமிர்தானந்தமயி மடம் அருகே உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனத்தில் செல்பவர்கள் இந்த சாலையை கடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைவில் இந்த பிரச்சினையை சரி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.