சென்னை தரமணி, மகாத்மா காந்தி நகர் காயிதேமில்லத் தெருவில் உள்ள பாதாள சாக்கடை சேதமடைந்து கழிவுநீர் கசிந்து வருகிறது. இதனால் தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி வருவதோடு, தெருவே அலங்கோலமாக காட்சி தருகிறது. எனவே சேதமடைந்த பாதாள சாக்கடையை சரி செய்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.