சென்னை கொளத்தூர் கணபதி ராவ் நகர் முதல் தெரு சந்திப்பில் உள்ள பாதாள சாக்கடை உடைந்து நீண்ட நாட்களாகிறது. இன்று வரை அது சரிசெய்யப்படாமலே உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சந்திப்பு பகுதியை வாகனங்கள் கடந்து செல்லும் போது விபத்துக்கள் நேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்து நிறைந்த இந்த பாதாள சாக்கடை உடனடியாக சரி செய்யப்படுமா?