தொற்றுநோய் அபாயம்

Update: 2022-08-01 12:01 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் 4-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இந்நிலையில் கழிவுநீரானது சாலையில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதாரம் கெட்டு தொற்றுநோய் பரவ வாய்ப்பு நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் ஏற்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்