சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் பகுதியில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்து அந்த பகுதியே அலங்கோலமாக காட்சி தருகிறது. குழந்தைகள் அதிகமாக வசிக்கும் பகுதி என்பதால் நோய்தொற்று ஏற்படும் முன்பு தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.