தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பஸ் நிலையத்தில் சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கு கழிவுநீர் தேங்காதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருள், பென்னாகரம், தர்மபுரி.