சென்னை வில்லிவாக்கம் ராஜமங்களம் 2-வது தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுதோடு தெருவில் நடந்து செல்லும் பாதசாரிகளும் வழுக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. கழிவுநீர் அடைப்பை குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் கவனித்து சரி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.