சென்னை செங்குன்றம் காந்திநகர், கலைஞர் நகர் 2-வது குறுக்கு தெருவில் உள்ள சாலை சேரும் சகதியுமாக, மழைநீர் தேங்கியபடி உள்ளது. மழைநீர் வடிகால் வசதியும் இல்லாததால் நீண்ட நாட்களாக தேங்கும் மழைநீரால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு இந்த சகதியில் வாகனங்களை ஓட்ட சிரமமாக இருக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும்.