சென்னை கொளத்தூர் சக்திவேல் நகர் சக்தி விநாயகர் கோவில் தெருவில் மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட கால்வாயில் கடந்த 2 மாதமாக கழிவுநீர் தேங்கியபடி உள்ளது. யாரும் கண்டுகொள்ளவுமில்லை, கழிவுநீரை அகற்றவும் இல்லை. மேலும் வடிகால் திறந்த நிலையில் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகள் தவறி விழுந்து விடவும் வாய்ப்புகள் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து கழிவுநீர் தேங்காதவாறும், மழைநீர் வடிகாலை அடைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.