காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய சாலையான காமராஜர் சாலையில், சாலையோரத்தில் உள்ள கழிவு நீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் சாலையோரம் முழுவதும் சேறும் சகதியுமாகி துர்நாற்றம் வீசுகிறது. சாலையின் ஓரத்தில் நிறுத்த வேண்டிய வாகனங்கள் அனைத்தும் சாலையிலேயே நிறுத்தி வைப்பதால் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் கவனித்து சாலை ஓர கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டுகிறோம்.