சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட அம்மன் குளக்கரை பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவில் அருகில் செல்லும் கழிவுநீர் கால்வாய் உடைந்து சேதமடைந்துள்ளது. அதை சீரமைக்க கோரி நகராட்சியிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.