கடும் துர்நாற்றம்

Update: 2026-02-01 18:43 GMT

நெகமம் பேரூராட்சி 11-வது வார்டு ஆறுமுகம் நகரில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் புதர் செடிகள் வளர்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்கி கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அத்துடன் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்