சிறுபாக்கத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் நுழைவுவாயில் முன்பு கழிவுநீரானது வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பள்ளி மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.