சேலம் அஸ்தம்பட்டி பிட்சார்ட்ஸ் ரோட்டின் ஆரம்ப பகுதியில் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. தற்போது பேரிகார்டு வைத்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் இது இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பேரிகார்டில் மோதி விபத்துக்குள்ளாக வாய்ப்புள்ளது. மேலும் பாதசாரிகளும் பாதாள சாக்கடையில் தவறி விழ வாய்ப்புள்ளது. எனவே திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடைக்கு விரைந்து மூடி அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-குமார், சேலம்.