காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அலுவலர்கள் பயன்படுத்த கழிவறை வசதி உள்ளது. இந்த கழிவறையில் கழிவுநீர் குழாய் உடைந்து அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி தேங்கி வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குழாயை சரி செய்ய வேண்டும்.