சென்னை வேளச்சேரி பஸ் நிலையத்தில் கழிவு நீர் தேங்கி வருகிறது. நீண்ட நாட்களாக தேங்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றுக்கும் வழி வகுக்கிறது. எனவே பஸ் நிலையத்தில் தேங்கும் கழிவுநீருக்கு மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு வழங்குமா?.