திண்டுக்கல் பிஸ்மிநகரில் சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவது இல்லை. கால்வாய்களில் குப்பைகள், மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்.