ஆண்டிப்பட்டி பேரூராட்சி பாலாஜிநகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பிரதான சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக மக்கள் செல்ல முடியவில்லை. மேலும் கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. அதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?