உடைந்த மூடி சரிசெய்யப்பட்டது

Update: 2022-05-08 14:19 GMT
சென்னை நெசப்பாக்கம் விவேகானந்தர் நகர், ஹரி சங்கர் தெருவில் பள்ளி அருகே உள்ள பாதாள சாக்கடையின் மூடி உடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள் உடைந்த மூடியை உடனடியாக சரி செய்துள்ளனர். விரைந்து செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்