தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-08-06 17:42 GMT
பண்ருட்டி தாலுகா நத்தம் காலனியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இ்ந்த நிலையில் அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடிநீர் தொட்டியின் கீழ் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்