தர்மபுரி நகரில் பிடமனேரி ரோடு -அப்பாவு நகர் பிரிவு சாலையில் மாவட்ட விளையாட்டு அரங்கு அருகில் ஆபத்தான நிலையில் சாக்கடை கால்வாய் உள்ளது. இரு சாலைகள் சந்திக்கும் இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்து செல்கிறார்கள். ஆபத்தான நிலையில் உள்ள இந்த சாக்கடை கால்வாயில் அடிக்கடி இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இந்த சாக்கடை கால்வாயை மூடி வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தசாமி, அப்பாவு நகர், தர்மபுரி.