களக்காடு அருகே கீழ துவரைகுளம் மேலத் தெருவில் வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே அங்கு சாலை, வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.