காஞ்சீபுரம், வேகவதி நதி ரோடு திரவுபதி அம்மன் கோவில் அருகில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் அடிக்கடி வெளியேகிறது. இதனால் சுகாதர கேடாக துர்நாற்றமும் அதிகளவில் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.