நோய் பரவும் அபாயம்

Update: 2023-07-16 15:03 GMT


மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் ஊட்டி பஸ் நிறுத்தம் அருகே பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் இருந்து கழிவுநீர் சாலையில் செல்லும் நிலை காணப்படுகிறது. இதனால் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.

ராஜு, மேட்டுப்பாளையம். 

மேலும் செய்திகள்